Homeசெய்திகள்தமிழ்நாடுகோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!

-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு உலா வந்தன. இதனை கண்ட கிராம மக்கள் கூச்சலிட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால், குடியிருப்பு அருகே இருந்த மறைவான புதர் பகுதியில் காட்டு யானைகள் சென்று மறைந்திருந்தன.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு:
 

அப்போது வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவியான மூதாட்டி ஜானகி என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது புதரிலிருந்து வெளியே வந்த காட்டு யானை மூதாட்டி ஜானகியை விரட்டிச் சென்று தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
 

சபவம் இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையை விரட்டி, இரவு 11 மணியளவில் ஜானகியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வெள்ளரிக்கொம்பை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ