கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 15-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பேக்கிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.