பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலையில் அவருடைய பழைய வீடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று இறங்கல் தெரிவித்தனர். கொலை சம்பவம்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த குற்றவாளிகள் 11 பேர் அன்று இரவு கைது செய்யப்பட்டனர். அதில் திருவேங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை உள்ளிட்ட மேலும் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. அதில் ஒருமனதாக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன், ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் பேகன்ஜி மாயாவதி அவர்களின் விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில் கட்சியின் மத்திய ஒருங்கினைப்பாளர்கள் Dr. அசோக்சித்தார்த் Ex MP (RS) மற்றும்
கோபிநாத் தலைமையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும், மாநில தலைவராக P.ஆனந்தன் BA, BL., DLL (USA) அவர்களையும் மாநில துணை தலைவராக T. இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார். மேலும் மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.