Homeசெய்திகள்தமிழ்நாடு12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்

12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்

-

12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் அன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “ இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வுகள் நடத்தும் திட்டம் இல்லை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்துவருகிறோம். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

காய்ச்சல் காரணமாக தமிழக பள்ளிகளில் விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம். ஆகவே ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும். வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ” என்றார்.

MUST READ