Homeசெய்திகள்தமிழ்நாடுஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

-

- Advertisement -

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image

போராட்டத்துக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை. இது நமது உரிமைக்கான பிரச்னை. விவசாய பட்ஜெட் ஒருபக்கம், ஒரு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதனை விடமாட்டேன். கடலூர் மாவட்ட மக்களுக்கும், மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்எல்சி. என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாது.

Image

டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் வரும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். இதன் பிறகும் என்.எல்.சி நிலங்களை அழித்தால் கடலூர் மட்டுமல்ல விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை சாலை மறியல் நடக்கும். எச்சரிக்கிறேன். இது நடக்கும். இன்னைக்கு நான் வருகிறேன் என்று வேலையை நிறுத்தி இருக்கிறார்கள். இது மட்டும் போதாது ஒருவேளை நாளைக்கு வேலையை தொடங்கினால் இந்த மாவட்டம் முழுவதும் சாலை மறியல்.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது விலையை கொஞ்சம் ஏற்றி என்.எல்.சி. கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் கேட்கிறேன் அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்துவிடுவாரா? ஈபிஎஸ்-க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா? ஸ்டெர்லைட் நிறுவனத்தை விட 100 மடங்கு மோசமான நிறுவனம் என்எல்சி. என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு இலவசமாக மின்சாரம் தருவதில்லை. மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது.” எனக் கூறினார்.

MUST READ