தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையை வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
அதன் அடிப்படையில் சென்னை வடக்கு அலகு காவல் ஆய்வாளர் ஹேமலதா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டையார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து சோதனை செய்தனர்.
அதில் கிலோக் கணக்கில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அவற்றை முழுவதும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வடிவேல் (வயது 32), சக்திவேல் (வயது 29), ஜோசப் (வயது 37), வெங்கடேசன் (வயது 34), கார்த்திக் (வயது 30) ஆகியோர் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் தண்டையார்பேட்டை மற்றும் அவரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் தடா பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கும், கள்ள சந்தையிலும் அதிகவிலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!
இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தி வந்த ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர், சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியையும், நான்கு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.