Homeசெய்திகள்தமிழ்நாடுஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை

ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை

-

- Advertisement -
kadalkanni

ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தர்பூசணி விலை உயர்வு

தேனி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவாலும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழையும் போதுமானதாக இல்லாததால் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு போன்ற இயற்கை உணவுகளை மக்கள் நாடிவருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் தர்பூசணி

தேனியில் போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால், வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தகவல்

கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தர்பூசணி விலை அதிகரித்துக் காணப்படும் நிலையில், வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கூறுகின்றனர்

MUST READ