ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனீஷ் சேகர் தனது அரசுப் பணியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் சேகர், கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் 2023- ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட ஆட்சியராக சிறப்பாகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நிறுவனமான எல்காட் மற்றும் TACTV நிறுவனங்களின் மேலாண் இயக்குநராக அனீஷ் சேகர் பணிபுரிந்து வந்த நிலையில், தனது ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாவுக்கு அனுப்பியுள்ளார்.
மக்கள் மனதை வென்றதா போர்?… ரசிகர்கள் விமர்சனம் இதோ…
அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அனீஷ் சேகரின் ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.