
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தனது ஒன்பது வயது மகளோடு, சேர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் அஞ்சலையம்மாள். இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
‘பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மகாத்மா காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சி ராணி யார் தெரியுமா? அவர் தான் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாள். புதுச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த போது, தமிழ்நாட்டிற்குள் அவர் நுழைந்தால், கைது செய்யப்படலாம் என்ற சூழலில், அவர் மாறுவேடத்தில் கூண்டு வண்டியில் வந்து பார்த்த போராளி அஞ்சலையம்மாள்.
1890- ஆம் ஆண்டு பிறந்தவரான அஞ்சலையம்மாள், 1921- ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். விடுதலைப் போராட்டத்திற்காக, நிலம் மற்றும் சொத்துகளை விற்பனை செய்த வீர பெண்மணி. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தனது ஒன்பது மகளுடன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியடிகளே சிறையில் வந்து பார்க்க விரும்பிய போராட்ட வீராங்கனைகளாக அஞ்சலையம்மாளும், அவரும் மகளும் இருந்தனர். கடந்த 1932- ஆம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்று சிறைச் சென்ற போது, அஞ்சலையம்மாள் நிறைமாதக் கர்ப்பிணி. அப்போது பெற்றெடுத்த தனது மகனுக்கு ஜெயில் வீரன் எனப் பெயரிட்டார்.
“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
சுதந்திரத்திற்கு பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் சேவையாற்றிய இந்த வீராங்கனையின் வாழ்க்கை விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத அத்தியாயம்.