Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா நினைவுத் தினம்- ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அண்ணா நினைவுத் தினம்- ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

- Advertisement -

 

 

அண்ணா நினைவுத் தினம்- ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி, ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைச் செலுத்தினார்.

ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் புதிய படத்தில் டி – ஏஜிங் தொழில்நுட்பம்!

அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தான் தங்கியுள்ள அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக, அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்!

விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற தி.மு.க. தொண்டர்கள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! என்றென்றும் அண்ணா!” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ