Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!

-

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இளநிலை பொறியியல் படிப்பில் ஒரு தாளுக்கானத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகவும், முதுநிலைப் படிப்பில் 450 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாயாக இருந்த கட்டணம் 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் கட்டணம் 50% உயர்த்தப்பட்டு, 600 ரூபாயாகவும், முதுநிலை மாணவர்களுக்கு 900 ரூபாயாகவும் ப்ராஜெக்ட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்!

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நான்காண்டு படிப்பை முடித்த பிறகு கல்விச் சான்றிதழ் மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

MUST READ