Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது

-

- Advertisement -

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலிசார் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கைது செய்யப்பட்ட ஞானசேகரன், வேறு ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, போலிசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட கோட்டுர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் பிரியாணி கடை நடத்திவரும் இவர், நாள்தோறும் இரவு 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் சென்று, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போனில் பல வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஞானசேகரன் மீது

MUST READ