Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் - நாராயணசாமி பேட்டி

பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி

-

பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் “விடியல் 2023” வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் மகேந்திரா, டெல்பி டிவிஎஸ், ரிலையன்ஸ், ஸ்ரீராம் சிட் பண்ட், சவீதா பொறியியல் கல்லூரி, மெட்பிளஸ், எக்விட்டாஸ், ஆதித்யா பிர்லா, எச்டிஎப்சி, பஜாஜ் அலையன்ஸ்எல்ஐசி, யமஹா மியூசிக்கல், ஜெப்ரானிக்ஸ், கோத்ரேஜ், ராயல் என்பீல்ட், சுந்தரம் பிரேக்ஸ் இந்தியா உள்ளிட்ட 150 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்ற 20 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கிறது . ஏற்கனவே நாட்டில் வேலைவாய்ப்பின்மை 19% த்திலிருந்து 27% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 2021 முதல் 2023 வரை கொரோனா காலத்தில் சிறு குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூடப்பட்ட தொழிற்சாலைகள் படிப்படியாக திறக்கப்பட வேண்டும். மத்திய அரசு பெரிய தொழிற்சாலைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இதனால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க, தொழிற்சாலைகளை உருவாக்க, ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உதவ முன்வர வேண்டும்.”

செந்தில் பாலாஜி கைது குறித்து பேசிய அவர் : கடந்த 10 நாட்களுக்கு முன் கரூர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதற்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கழகம் வந்தார். பல கூட்டங்களில் கலந்து கொண்டார். அவர் திரும்பிச்சென்ற பிறகு அமலாக்கப் பிரிவுத்துறை சோதனை நடத்துகின்றன. 2016 தொடுக்கப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை செய்ததையடுத்து 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜிக்கு பல தொல்லைகளை கொடுத்தார்கள்.அதற்குப் பிறகு அவரை கைது செய்தார்கள். உள்துறை அமைச்சர் வந்து சென்ற பிறகு கைது நடவடிக்கை செய்யப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை திட்டமிட்டு திமுகவை அழிக்க வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்தை முட்டுக்கட்டை போட வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநர் ரவி இது போன்ற வேலையை செய்து வருகிறார்.

அவர் யார் சொல்லி செய்கிறார் மோடி அமித்ஷா சொல்லி செய்கிறார். அவர் தன்னிச்சையாக செய்யவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தொல்லை கொடுத்து, அதன் மூலமாக பாரதிய ஜனதா எக்காலத்திலும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. அண்ணாமலை ஒருவர் போதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சமாதி கட்ட; அந்த நிலைமை தற்பொழுது உருவாகி வருகிறது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்து விசாரணைக்கு கேட்டிருக்கிறார்கள். அவர் மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு யார் பொறுப்பு யார் பதில் சொல்வது; அமலாக்கத்துறையும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தான் பொறுப்பு.. 2024 இதற்கெல்லாம் முடிவு வரும் அதற்கு முக்கிய காரணமாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதனால் தமிழக முதலமைச்சர் பெயரில் கோபம்..

புதுச்சேரியில் கிரண்பேடியை ஆளுநராக நியமித்து ஐந்தாண்டும் தொல்லை கொடுத்து என்னை நடுரோட்டில் போராட வைத்தார்களோ, அதே வேலையை தமிழ்நா செய்ய முயற்சிக்கிறார்கள்; இது பாஜகவிற்கு கைவந்த கலை. பாஜக ஆளும் அசாம், மத்திய பிரதேசம், குஜராத் மாநில முதல்வர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. ஆனால் அங்கெல்லாம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கர்நாடகாவில், பொம்மை அரிசின் 40% கமிஷன் ஊழல் அரசு என்று காங்கிரஸ் சார்பில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.. இது மோடி அரசின் திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்து வருகிறது. அதுதான் செந்தில் பாலாஜிக்கும் செய்யப்பட்டிருக்கிறது. இது முறியடிக்கப்படும்.” என்று பேசினார்..

MUST READ