Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்யும் திமுக அரசு - அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்யும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

-

- Advertisement -
"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.

 

விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாகியிருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ