அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.
தமிழக பாஜகவில் சில தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமென்று அண்ணாமலையை நிர்பந்திக்கின்றனர், ஆனால் அண்ணாமலை அதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை எனவும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்றும் கட்சி நிர்வாகிகளிடையே பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் பற்றிய ஸ்டிங் ஆப்ரேஷனால் கட்சி நிர்வாகிகளிடையே அண்ணாமலை மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் பாஜகவில் இருந்து பெண் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர்.
இந்த அசாதாரணமான சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கிறார். வருகிற 26ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார்.
அதே சமயம் ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லிக்கு செல்கிறார்.