அண்ணாமலையின் ‘DMK FILES’- அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
திமுக முக்கிய பிரமுகர்களான 17 பேரின் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு சுமார் 50 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஏ.வ.வேலுவுக்கு 5,442 கோடி ரூபாய், கே.என்.நேருவுக்கு 2 ஆயிரத்து 495 கோடி ரூபாய், பொன்முடி 581 கோடி ரூபாய், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயிரம் கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் சுமார் 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக திரையிட்டு காட்டினார்.
திமுக எம்.பிக்கள் கனிமொழிக்கு 830 கோடி ரூபாய் சொத்துக்களும், கலாநிதி மாறனுக்கு 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் சொத்துக்களும், டி.ஆர்.பாலுவுக்கு 10 ஆயிரத்து 840 கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல் கதிர் ஆனந்துக்கு 579 கோடி ரூபாய் சொத்துக்களும், கலாநிதி வீராசாமிக்கு 2 ஆயிரத்து 923 கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு ரூ.902 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இங்கு அரசியல் நடக்கிறது என குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் கம்பெனியானது ஷெல் கம்பெனியானது கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு ரூ.200 கோடி ரூபாய் வழங்கியதாக சாடினார்.