Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தை சோ்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிப்பு

தமிழகத்தை சோ்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிப்பு

-

- Advertisement -

தமிழகத்தை சோ்ந்த பள்ளி ஆசிரியர்கள்  கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சிறந்த ஆசிரியா்ளுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா்
விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தமிழகத்தை சோ்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 50 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சச்கம்  வெளியிட்ட அறிவிப்பில் வேலூா் மாவட்டட் ம் குடியாத்தம்  ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா்
கோபிநாத்துத்க்கும், மதுரை மாவட்டம் லட்சுட்மிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் முரளிதரன் ஆகியோருக்கு  தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியா் தினவிழாவில் குடியரசுத் தலைவா் திரௌ பதி முா்முமுா் விருது வழங்கி கெளரவிப்பார். விருதுடன் ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

MUST READ