Homeசெய்திகள்தமிழ்நாடுவிஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு

-

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனுஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை தெரிவித்துள்ளார்.

வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன் இந்த புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவையும் ஏற்கனவே வரும் ஜூலை 11 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்ற அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுக்களோடு சேர்த்து விசாரிக்க வேண்டுமென காலை 10:30 மணி அளவில் மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதியரசர் மகாதேவன் மற்றும் முகம்மது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

அதனை ஏற்றக்கொண்ட தலைமை நீதிபதி இந்த பொதுநல மனுவையும் வரும் 11 ஆம் தேதி மற்ற மனுக்களோடு சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

MUST READ