Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்...

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

-

அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப் பெற ஒப்பந்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

டிச. 9 ம் தேதி வரை ஒப்பந்தங்களைப tntenders.gov.in என்ற இணைய வழியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பெறுவோருக்கான தகுதியாக 36 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தரமான உணவு , இலவச கழிவறை வசதி , மழைக் காலங்களில் நீர் தேங்காத வகையிலும் , சாலையை ஓட்டுநர்கள் தெளிவாக பார்க்கும் வகையிலுமான இட அமைப்பு , சாலையின் இடது புறமாக உணவகம் இருக்க வேண்டும், அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா , எம்.ஆர்.பி க்கு மிகாமல் உணவுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் , பயணிகள் குறைவான ரேட்டிங் அளித்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட 36 நிபந்தனைகள் ஒப்பந்தம் பெறுவோருக்கான தகுதியாக விதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

MUST READ