Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

-

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் செய்ய  தொடக்கம்.

36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,550 இடங்களும் , ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும் என மொத்தம் 9050 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது . அகில இந்தியா கோட்டாவில் 15% இடங்கள்(851இடங்கள்) மற்றும் மாநில பிரிவில் 85% இடங்கள் (8199 இடங்கள்) நிரப்பப்பட உள்ளன

பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 250 இடங்கள், தனியாரில் 1950 என மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய கோட்டாவில் 330 இடங்கள், மாநில கலந்தாய்வில் 1870 இடங்கள் நிரப்படவுள்ளன.

தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

இன்று காலை 10 மணிக்கு முதல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது  தொடங்கியு்ளளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

MUST READ