பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது. இதேபேோல், விழுப்புரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியிலும் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து, சம்பவந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடடிவக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையில் IAS தரத்தில் உள்ள அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறை இயக்குனர், இணை இயக்குனர் பதவிகளில் உள்ளவர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு அதிகாரிகள் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய உள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது தங்களது பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவும், மாதம்தோறும் ஆய்வு அறிக்கையை 5ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.