Homeசெய்திகள்தமிழ்நாடுநெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு - வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

-

- Advertisement -

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு போட்டி… காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள்…ஏறித்தழுவி வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்..குறித்தான செய்தி தொகுப்பு..நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு - வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

தமிழ்நாட்டை பெறுத்தவரை தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 4ம் தேதி நிகழாண்டின் முதல் போட்டி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாட்டியேயே அதிக வாடிவாசல்(தொழு) கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வரும் நிலையில் அதிக போட்டிகளும் இம்மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தைத்திருநாளான பொங்கலுக்கு மறுநாள் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.இந்த நிலையில் நிகழாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளைக் களமிறக்க அதன் உரிமையாளர்கள் காளைகளுக்குத் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக,விராலிமலை அடுத்துள்ள திருநல்லூரைச் சேர்ந்த முத்து என்பவர் காளைகள் மீது தீவிர காதல் கொண்டவர் இவர் 10 காளைகள் வளர்த்து வருகிறார்.இவர் வளர்த்து வரும் கருப்பு, வெள்ளை உள்ளிட்ட காளைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவைக்கிறார் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி பரிசுகளை தான் வளர்க்கும் காளைகள் பெற்று தந்துள்ளது என்றபோதிலும் சில காளைகள் காளையர்களிடம் பிடிபடுவது என்பது தவிர்க்க முடியாதது என்கிறார். காளைகளின் விளையாட்டு ஒவ்வொரு களத்திற்கும் மாறுபடும் சில களங்கள் காளைகளுக்கு சாதகமாகவும் சில களங்கள் மாடுபிடி வீரர்களுக்கு சாதகமாகவும் அமையும். தாங்கள் வளர்த்த காளைகள் வெற்றி பெறும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோமோ அதேபோல் தோல்வியை தழுவும் போதும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் வேண்டும் அதை பழகி கொள்ள வேண்டும் என்கிறார்,

அவர் மட்டுமின்று குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது முதல் வேலையாகக் காளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை எழுந்தவுடன், காளைகளுக்குப் பயிற்சி அளிப்பதே தங்களது முதல் கடமையாகக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை  நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி, சீறிப்பாயும் பயிற்சி, கொம்புகளை வைத்து குத்தும் பயிற்சி  உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு அவைகளை இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க ஆர்வத்துடன் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களிடம் ஆண்டனி,தளபதி, ஆதி மகவான்,ஆதி சிவன்,பட்டா கத்தி,சிங்கம்,அதிபதி,செவளை உள்ளிட்ட காளைகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் உடன் பிறந்த சகோதரர்களைப் போல் இவர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.இதனிடையே,தச்சங்குறிச்சி, மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,திருநல்லூர் ஜல்லிக்கட்டிலும் கோயமுத்தூர்,தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதற்காக, தொடர்ந்து இக்காளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுவரை பங்கேற்ற ஜல்லிக்கட்டில் தளபதி மற்றும் ஆண்டனி,அதிபதி,செவளை ஆகிய காளைகள் எங்கும் பிடிபடாமல் பல பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் ஜல்லிக்கட்டிலும், காளைகளுக்கு சிறப்பாகப் பயிற்சி கொடுத்து பரிசுகளை அள்ளிச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் தங்கள் பெயர் மற்றும் தங்களின் ஊர் பெயர் வெளியில் தெரியவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் காளைகளை ஜல்லிக்கட்டு களத்தில் இறக்கி விடுவதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டி உள்ளதாகவும், வாடியில் அடைத்த தங்கள் காளைகள் பிடிபடாமல் வீரர்களை பந்தாடி செல்வதை பார்க்கும் போது  அந்த சிரமம் எல்லாம் மறைந்து விடும் என்கிறார்.

தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!

MUST READ