ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..