ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு
ஏப்ரல் 10 – ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 – ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து அரசு,அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும் , 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 – ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 – ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் . 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , மாவட்டங்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 – ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 – ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .
இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் , ஆசிரியர் , பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை , கற்றல்நிலை , உடல்நலம் , மனநலம் , கல்வி இணைச் செயல்பாடுகள் , கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் , கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் .மேலும் , பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023” என தெரிவிக்கப்பட்டுள்ளது.