Homeசெய்திகள்தமிழ்நாடுDGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

-

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

கடந்த ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த AK விஸ்வநாதன் IPS அறப்போர் மீது போட்ட தொடர் சட்ட விரோத பொய் வழக்குகளுக்காக அவர் மீது ஏற்கனவே செப்டம்பர் 2019 இல் அரசிடம் புகார் கொடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் ஊழல் புகார் கொடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காகவும் அறப்போர் இயக்கம் அந்த புகாரில் சமரசம் செய்ய முடியாது என்றதாலும் அப்போதைய ஆணையர் அறப்போர் மீது பல பொய் வழக்குகளை தொடுத்தார்.

 

 

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

அவர் பல்வேறு காவல்துறை ஆய்வாளர்கள் மூலம் அறப்போர் மீது போட்ட பல்வேறு வழக்குகளை அதிகார துஷ்பிரயோக வழக்குகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வருடம் ரத்து செய்துள்ளது. இந்த மாத இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்து அறப்போர் மீது அவர் தொடுத்த பொய் வழக்குகள் மற்றும் சித்திரவதைக்காக (harassment) அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், மாநில DGPக்கும் தற்பொழுது புகார் அனுப்பி உள்ளது.

MUST READ