Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

-

- Advertisement -

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரியும், போதுமான காவல்துறை பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிடக்கோரி இந்து மக்கள் கட்சி அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக்கோரி மார்ச்-20ம் தேதி காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, யாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மாட்டோம், அப்பேத்காரின் சிலைக்கு காவி வேட்டி, சத்தன திலகம், விபூதி மற்றும் குங்குமம் அணிய மாட்டோம். வாத்தியங்கள் இசைக்க மாட்டோம், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என உத்தரவாதம் அளித்தும் அனுமதி மறுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால், காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட, வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், அனுமதி வழங்கினால் பொது அமைதி பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று காவல்துறை வாகனத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் என்றும், உத்தரவாதம் மீறப்பட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்…கதறிய நண்பன்: சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!

MUST READ