கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
அதற்காக பயனாளர்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட சூழலில், தற்பொழுது எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் மூலமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளர்களாக இருக்கக்கூடிய மகளிருக்கு 1 ரூபாய் அனுப்பி, நிதி முறையாக போய் சேருகிறதா என்ற சோதனை முயற்சி தமிழ்நாடு நிதித்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறார்கள்.
1 கோடியே 6 லட்சம் என்ற மிகப்பெரிய அளவில் கையாளக்கூடிய இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள காரணத்தினாலே மாதந்தோறும் 1000 என்னும் போது, அதற்காக 1000 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் பரிமாறப்பட இருப்பதால் சோதனை முயற்சியாக நேற்று மாலை முதலே எஸ்.பி.ஐ. மட்டுமல்லாமல் மற்ற வங்கி பயனாளர்கள் இணைத்துள்ள பல்வேறு வங்கிகளுக்கு நிதிக்குழு சார்பில் 1 ரூபாய் அனுப்பி சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் முதல் வங்கிகள் மூலமாக பயனாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.