
நெல்லை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரோஹரா முழக்கத்துடன் வெகு விமர்சையாக இன்று (ஜூலை 02) காலை 08.00 மணிக்கு நடைபெற்றது.
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
517-வது ஆண்டாக நடைபெற்ற இந்த தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவைச் சபாநாயர் அப்பாவு, பா.ஜ.க.வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி, கோயில் பகுதிகளில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!
நெல்லையப்பர் தேர் 450 டன் எடைக் கொண்டது; அகலம் 28 அடியாகவும், உயரம் 70 அடியாகவும் உள்ளது.