சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று (அக்.12) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்வது பெருமையாக உள்ளது. ஏராளமான வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஊக்கத்தொகை வழங்குகிறோம். ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க சென்னையில் விளையாட்டு நகரம் அமையவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
அதைத் தொடர்ந்து, பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாதம் ஒரு பன்னாட்டு அல்லது தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகிறோம்” என்றார்.
‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.