
தமிழக சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் மீது பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காவிரி பிரச்சனை தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்!
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என தீர்மானத்தில் ஏற்கனவே உள்ளது” என்றார்.
“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
அதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கர்நாடகாவில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் காவிரி குறித்து முதலமைச்சர் பேசியிருக்கலாம். காவிரி நீரைத் திறக்காத காங்கிரஸ் கட்சியோடு ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள்? காவிரி நீரைப் பெற கர்நாடக அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. ஜூலை முதல் நீர் பற்றாக்குறை ஏற்படும் என பலமுறை எச்சரித்தும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை” என்றார்.