Homeசெய்திகள்தமிழ்நாடுஅத்திக்கடவு - அவினாசி திட்டம்: இபிஎஸ்-க்கு, செந்தில் பாலாஜி பதிலடி!

அத்திக்கடவு – அவினாசி திட்டம்: இபிஎஸ்-க்கு, செந்தில் பாலாஜி பதிலடி!

-

- Advertisement -

அத்திக்கடவு –  அவினாசி திட்டம் குறித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு, அமைச்சர்  செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசியில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நடைபெற்றதாகவும், ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு 4 ஆண்டுகளாக திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, அத்திக்கடவு – அவினாசி திட்டம் கடந்துவந்த பாதை என்ற தலைப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1957ஆம் ஆண்டில் பவானி ஆற்றின் உபரிநீரை திருப்பி விடவேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள், அப்போதைய முதலமைச்சர் காமராஜரிடம் மனு வழங்கியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர்  1972ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டத்திற்கு அத்திக்கடவு – அவினாசி திட்டம் என பெயரிடப்பட்டு திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாகவும், கடந்த 2009-ஆம் ஆண்டில் மீண்டும் கலைஞர்  ஆட்சியில் Technical expert committee திட்ட வரையறை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், 1634 கோடி செலவில் 34 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், போதிய நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப் படுத்தாமலும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். பின்னர் 2021-2024 கால கட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இத்திட்டத்திற்கு முழுமையாக தேவையான 1960 கோடி நிதியையும் ஒதுக்கி, அத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை களைந்து, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டதாக செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இறுதியாக 2025-ஆம் ஆண்டி நீர் மக்களுக்கு கிடைக்கப் பெற்றதாகவும் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

MUST READ