Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ஏ.டி.எம்.கள் இயக்காததால் மக்கள் தவிப்பு....கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பூக்கள்!

சென்னையில் ஏ.டி.எம்.கள் இயக்காததால் மக்கள் தவிப்பு….கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பூக்கள்!

-

- Advertisement -

 

சென்னையில் ஏ.டி.எம்.கள் இயக்காததால் மக்கள் தவிப்பு....கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பூக்கள்!
Video Crop Image

மழை பாதிப்பால், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பல ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவித்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்தது, மின்தடை, சிக்னல் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பணம் எடுக்க ஆர்வமுடன் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் பொதுமக்கள் செயல்படாதது அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். செயல்படும் ஏ.டி.எம். மையங்களில் பணமெடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

இதனிடையே, புயல் பாதிப்புக்கு பின் அம்பத்தூர் தொழிற்சாலைக்கு மீண்டும் தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மழைநீர் வடியத் தொடங்கியதால் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ஊழியர்கள் வருகை அதிகரித்துள்ளது. முழுமையாக வெள்ளம் வடியாத நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. புயல் மழையால் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜம் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள்!

மழை பாதிப்பு காரணமாக, சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மலர்கள் அழுகி சேதமடைந்தன. கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் மழையால் அழுகிய பூக்கள், குவியல், குவியலாக கிடப்பதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். அத்துடன், துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.

MUST READ