Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக தலைவரை படுகொலை செய்ய முயற்சி- ஒருவர் கைது

பாஜக தலைவரை படுகொலை செய்ய முயற்சி- ஒருவர் கைது

-

பாஜக தலைவரை படுகொலை செய்ய முயற்சி- ஒருவர் கைது

இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை படுகொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tஹ்

இராமநாதபுரம் மாவட்ட புதிய பாஜக தலைவராக தரணி முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி இரவு அவருடைய வீட்டில் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கூலிப்படையினரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவனின் ஆதரவாளரான விக்கி என்ற விக்னேஸ்வரன் மற்றும் சேட்டை பாலா ஆகியோரையும் கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், அவருடைய நெருங்கிய ஆதரவாளரான வக்கீல் சண்முகநாதன் ஆகிய இருவரையும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் . இந்த நிலையில் இன்று சென்னையில் வக்கீல் சண்முகநாதனை இராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கைது செய்து உள்ளனர். தலைமறைவாக இருந்த வக்கீல் சண்முக நாதனை 25 நாட்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

MUST READ