Homeசெய்திகள்தமிழ்நாடுஆக. 15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆக. 15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

-

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்பட ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த மே 1 ஆம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் சுப்பையா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்
சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 100 நாள் வேலைத்திட்டம், சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

MUST READ