Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டோ ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 9,000 கோடியை வரவு வைத்த வங்கி!

ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 9,000 கோடியை வரவு வைத்த வங்கி!

-

- Advertisement -

 

ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 9,000 கோடியை வரவு வைத்த வங்கி!
File Photo

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவரது வங்கிக் கணக்கில் சுமார் ரூபாய் 9,000 கோடியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வரவு வைத்துள்ளது. இதையடுத்து, மகிழ்ச்சியில் திளைத்த அவுட்டோர் ஓட்டுநர், தனது நண்பருக்கு வழங்க வேண்டிய ரூபாய் 21,000-யை தனது வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார்.

ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!

இந்த நிலையில், தவறுதலாக வேறொரு வங்கிக் கணக்கில் கண்டறிந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் உயரதிகாரிகள், உடனடியாக வங்கித் தரப்பு வழக்கறிஞர்களை அழைத்துச் சென்று, ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்கள் நண்பருக்கு அனுப்பிய பணம் போக, மீதமுள்ள பணத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு வங்கி நிர்வாகம் ராஜ்குமாரிடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ராஜ்குமாரின் ஒப்புதல் உடன் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டப் பணத்தைத் வங்கி நிர்வாகம் திரும்பப் பெற்றது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை!

இது குறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தவறுதலாக வேறொரு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட சுமார் 9,000 கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டது” என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

MUST READ