Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

-

- Advertisement -

மாங்காட்டில் கிரெடிட் கார்டு  பயன்படுத்திய வாலிபர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை. நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டாம். வீடியோவில் எனது தற்கொலைக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் தான் காரணம் என உருக்கமான பதிவு.கிரெடிட் கார்டுக்கு அதிக வட்டிக் கட்டியும் வங்கியில் கொடுத்த தொந்தரவு காரணமாக  தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார்.

ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

சென்னை போரூர் பகுதியை சேந்தவர் கண்ணன்/30 இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரளா/29 என்பவரை காதல் திருமணம் செய்து இவர்களுக்கு  மதுமிதா/11 என்ற மகளும் மாதவன்/8 என்ற மகனும் உள்ளனர்.7 வது படித்து ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளியான  இவர் மாங்காட்டில்  வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இது குறித்து மாங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் தற்கொலைக்கு முன்பு அவர் எடுத்த வீடியோ பதிவு கண்டெடுக்கப்பட்டது. அதில் SBI,RBL,KOTAK,போன்ற நிறுவனங்களின் கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளாா்.

அந்த கிரெடிட் கார்டையை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளாா். அதற்கான கடன் பணத்தை உரிய நேரத்தில் கட்ட தவறியதால் பல லட்சம் ரூபாயை வட்டியாகவே கட்டி வந்ததாகவும். ஆனாலும் வங்கியில் இருந்து பணத்தை திருப்பி செலுத்தக்கோரி தொந்தரவு செய்து வந்தாக தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் எனக்கு வங்கியில் இருந்து  ஆசை வார்த்தைக் கூறி கிரெடிட் கார்டு வாங்க வைத்தனர். நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்த வேண்டாம் எனவும் எனது நிலமை யாருக்கும் வரவேண்டாம். அரசு இதனை கவனிக்க வேண்டும். ஆனால் யார் இறந்தாலும் அரசு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை குறித்து மாங்காடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

MUST READ