Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

-

 

ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!
File Photo

சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியது. இதனால் சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!

அன்னனூர் ரயில் பணிமனையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய சூழலில், நிற்காமல் சிக்னலைத் தாண்டிச் சென்றது. அதில், ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. பணிமனையில் இருந்து ரயில் புறப்பட்டதால், ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதன் காரணமாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டுள்ளதால், சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், தமிழக மேற்கு மண்டலங்கள், வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மேலும், சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அலுவலகம் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்!

தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்துக்கு அதிக பனிமூட்டம் காரணமா? அல்லது சிக்னல் தெரியவில்லையா? அல்லது ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ