Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

ஆவடியில் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

-

 

ஆவடியில் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் அம்பத்தூர், வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 61) கடந்த வருடம் ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2022- ம் ஆண்டு ஜூலை மாதம் கே.கே. நகரில் வசிக்கும் ராமசாமி (வயது 64) கோடம்பாக்கம், பாளைக்காரன் குறுக்கு தெருவில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்று பவர் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார்.

குரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!

வீடு பிடித்திருக்கவே அந்த வீட்டை வாங்குவதற்கு விலைபேசி ரூபாய் 1,50,00,000 வங்கி மூலமாகவும், ஒரு கோடி ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ராமசாமி வீட்டை கிரையம் செய்து கொடுக்காமல், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். எனவே, என்னுடைய ரூபாய் 2.50 கோடி ரூபாய் பணத்தை ராமசாமி பெற்றுக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார். தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் கூறியிருந்தார்.

பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

அதன் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பெயரில் உதவி ஆணையர் பொன்சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆய்வாளர் கீதா, ராமசாமியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைந்துள்ளார்.

MUST READ