பறவைக் காய்ச்சலைத் தடுக்க தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!
கேரளா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதன் அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும், கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், “பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள், முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை ஆய்வுச் செய்ய வேண்டும்; தமிழகம் முழுவதும் உள்ள கேரளா- தமிழகம் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு, சோதனைத் தீவிரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
இதையடுத்து, . தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 12 சோதனைச்ச்சாவடிகளில் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.