அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த், குடும்பத்துடன் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாட்டின் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சன்னியாசிகள் மற்றும் மடாதிபதிகள் என சுமார் 8,000 பேருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த்திற்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பங்கேற்க அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில், தனது மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்யநாராயணன் ஆகியோருடன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் எப்போது”- தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று அயோத்திச் செல்லும் நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி 22- ஆம் தேதி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 23- ஆம் தேதி அன்று சென்னை திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.