இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 29) நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?
தமிழக ஆளுநர், முதலமைச்சர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அனைத்து இஸ்லாமிய மக்களுக்கு ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், பக்ரீத் பண்டிகை அனைத்து மக்களுக்கும் அன்பு, ஆரோக்கியம், செழிப்பு உள்ளிட்டவை வழங்கும் எனவும் வாழ்த்தியுள்ளார்.
இதேபோல், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியறுத்தி அன்பு நெறிக்காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளாம், பக்ரீத் திருநாளில் சாதி, மதப் பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதிப் பூணுவோம் என்று கூறியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இஸ்லாமியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், உள்ளிட்டத் தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.