Homeசெய்திகள்தமிழ்நாடுபக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!

-

- Advertisement -

 

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!
File Photo

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி நடந்த வாரச்சந்தையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 15,000- க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. அவற்றை வாங்கிச் செல்வதற்காக, சேலம், கோவை, விழுப்புரம், கடலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்தனர்.

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

அதிகபட்சமாக ஒரு ஆடு 16,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி, ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குவதற்காக, இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

MUST READ