Homeசெய்திகள்தமிழ்நாடுஅறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் - விவசாயிகள் பரிதாபம்

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் – விவசாயிகள் பரிதாபம்

-

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் – விவசாயிகள் பரிதாபம்

பலத்த சூறை காற்றுடன் இரவு முழுவதும் பெய்த கனமழையால்   சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் ஓராண்டு உழைப்பு ஒரே நாளில் பறிபோனதாக கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் - விவசாயிகள் பரிதாபம்
வாழை மரங்கள் சாய்ந்தது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர், குப்பநத்தம், கல்லாத்தூர், ஊர் கவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு வாழை மரங்கள் பயிரிட்டு சாகுபடி நடைபெறுகிறது. 90 சதவீத விவசாயிகள் வாழை மரங்கள் மட்டுமே வருடந்தோறும் பயிரிட்டு வருகின்றனர். அதன்மூலம் நல்ல மகசூல் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வருடம் விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் நாற்பது முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து அனைத்து வகையான வாழை மரங்களும் அப்பகுதியில் பயிரிட்டு இருந்தனர். குறிப்பாக செவ்வாழை, கற்பூர வள்ளி வாழை, மலை வாழை, பூ வாழை, ஏலக்கி வாழை போன்ற பல்வேறு வகையான ரகங்களை பயிரிட்டனர். சுமார் நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் செங்கம் அடுத்த சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததுடன் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதனால் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதாரம் அடைந்தது.  சூறைக்காற்றில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து முறிந்தது விவசாயிகள் மத்தியில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் - விவசாயிகள் பரிதாபம்
வாழை மரங்கள் முறிந்தது

நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் சோகத்தில் மூழ்கினர். கடன் வாங்கி செலவு செய்து பயிரிட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால் பெரும் வேதனை அளிப்பதாகவும், ஓராண்டு உழைப்பு ஒரே நாளில் பறிபோனதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனையுடன் கூறினர்.

மேலும் சூறைக்காற்றில் வாழைகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

MUST READ