பேனர், கட் அவுட் கூடாது- விஜய் உத்தரவு
நாளை மறுநாள் நடிகர் விஜய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தளபதி விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ‘மதுரையில் விரைவில் மாநாடு’, ‘திருச்சியில் மாநாடு’ என போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தி வருகின்றனர். விஜயும் அவர் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் சம்பந்தமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி, தான் அரசியலில் நுழையப் போவதை உறுதிப்படுத்தி வருகிறார். தன்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்களையும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளை 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார். இதுகுறித்து நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் விளம்பரம் செய்துவருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பேனர், கட் அவுட் வைக்கக்கூடாது எனவும் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.