Homeசெய்திகள்தமிழ்நாடுமணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

-

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

நெல்லை அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Manimuthar Dam/Falls | Tirunelveli District, Government of Tamil Nadu |  India

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும், செங்கல் தேரி பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதற்கு மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றும் அருவியில நீர் வரத்து குறையாததை அடுத்து மூன்றாவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர். இதை அடுத்து பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தடை விதிக்கப்பட்டு பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கு தடைவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

MUST READ