தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
தமிழ்நாடு உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை தலைவர் (DGP) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது .
மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம், இவர் கடந்த 2009 ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணி சேர்ந்தார் தொடர்ந்து காவல்நிலையத்தில் பணி புறிந்துவந்தார் பதவி உயர்வு பெற்று முதல்நிலை காவலரானர்.
இந்நிலையில் பணியின் போது தாடி வைத்திருந்ததால் தன் மீது நடவடிக்கை எடுக்க பட்டு பணி மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க பட்டது பின்னர் ஈடுகட்டு விடுப்பு குறித்து தமிழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதம் விடியோ வெளியிட்டார். இது ஊடகங்களில் வெளியானாது. இதனை காரணத்தை காட்டி தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் DGP சைலேந்திர பாபு பொறுப்பு ஏற்றவுடன் இவரை காவல் பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, விக்டோரிய கவுரி, இந்தியா பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டது பலதரப்பட்ட குடிமக்களின் நம்பிக்கைகளும் கலாச்சாரமும் ஒருங்கே கொண்டது தான் இந்தியாவின் அழகும் தனித்துவமும்.
மனுதாரர் காவல்துறையினராக இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் பணியில் இருக்கும் போதும் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள், வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாடி வைத்தார் வீடியோ வெளியிட்டார் முக கவசம் அணியவில்லை என்ற காரணத்தைக் காட்டி நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கியது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இது ஏற்றுக்கொள்ள முடியாது இந்த குற்றங்களுக்கு காவலருக்கு சிறிய தண்டனை ஏதாவது வழங்கலாம் எனக் கூறி காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளாட் பிறப்பித்துள்ள உத்தரவில்.
” மனுதாரர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் கொரோனா நோய் தொற்று காலத்தின் போது முகக்கவசம் அணியாமல் விடுப்பு தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தது. மேலும் காவல் ஆய்வாளர் ஈடுகட்டு விடுப்பு அளிக்காதது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது. இவை இரண்டும் காவல்துறை விதிகளுக்கு முரணானது என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மனுதாரரை விட உயர்ந்த பதவியில் இருந்த காவல் துறை துணை ஆணையர்(DC) மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் சமூக வலைதளங்களில் இது போன்ற ரீலஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவை தொடர்பாக ஊடகங்களில் செய்தியும் வெளியாகி உள்ளது.
மேலும் விடுப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட காவலர்களை டிஜிபி நேரில் அழைத்து ஆறுதல் தெரிவத்துள்ளார் இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆனால் காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மீதான விவகாரத்தில் மட்டும் உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதை தனி நீதிபதியும் சுட்டிக்காட்டி, உத்தரவை ரத்து செய்து, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனுதாரர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதில் இந்த அமர்வு நீதிமன்றமும் உடன்படுகிறது.
ஆகவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் விவகாரம்…. விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜுன்!