Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?"- விரிவாகப் பார்ப்போம்!

“ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்!

-

 

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
Photo: TN Govt

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10- க்கு மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாக்கள், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு மீன்வள மற்றும் கால்நடை பல்கலைக்கழத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புதல் கோரிய மசோதா, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

MUST READ