Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு

-

தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் களப்பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கெடுப்பில் பல வகை பறவைகள் கண்டறியப்பட்டன

கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறை சார்பில் நவீன முறையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கின. 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ள அந்த வனக்கோட்டத்துக்கு உள்பட்ட 20 இடங்களில் இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கிரே ெஹட்டட், யுரேசியன் பிளாக் பேர்ல், சுமிட்டர் வாபுலர், நீலகிரி ஃபிளை கேட்ச்சர் உள்ளிட்ட 25 அரிய வகை பறவை இனங்களைக் கணக்கெடுக்க சிறப்பு கேமராக்கள், தொலைநோக்கி, ஒலி அறியும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இனப்பெருக்கம், வெளிநாட்டுப் பறவை வருகை குறித்து ஆய்வு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், கடம்பூர் உட்பட 10 வனச்சரகங்களில் இதுவரை மலபார் கிளி, மஞ்சள் பிடாரி மரங்கொத்தி, சின்ன தேன் சிட்டு பட்டானி குருவி உட்பட16 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்டுள்ளன. இதேபோல், கோடியக்கரை, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

MUST READ