தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடவுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை இன்று காலை முதல் எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை எந்த நேரமும் அறிவிக்கலாம். 39 மக்களவைத் தொகுதிகளிலும் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
பா.ஜ.க. 20 இடங்களிலும், தாமரைச் சின்னத்தில் 4 பேரும் போட்டியிடுகின்றனர். எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி என்பதை ஓ.பன்னீர்செல்வம் பேட்டிக்கு பிறகு அறிவிப்போம். ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்” என்றார்.
ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!
தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிந்ததாக அண்ணாமலை அறிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இடமில்லை என்பது தெரிய வந்துள்ளது.