Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?- அண்ணாமலை

பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?- அண்ணாமலை

-

பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?- அண்ணாமலை

பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் நடைபெறும் எல்லா பொதுக்கூட்டங்களிலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பர். நாளை ராமேஸ்வரத்தில் தொடக்க விழா மட்டுமே. மாநில அரசுதான் நிலங்களை என்.எல்.சிக்காக கையகப்படுத்திக் கொடுக்கிறது. நெல் வயலில் ஜேசிபியை இறக்கி நிலத்தை கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது. திமுக கோப்புகள் 2-ல் பல்வேறு ஊழல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. திமுக அரசின் ஊழல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத்துறையிலும் புகார் அளிக்க உள்ளோம். பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?

நடைபயணத்தில் பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம். 168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதிபடுத்தவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தொலைப்பேசியில் பேசினேன். மருத்துவ சிகிச்சையில் அவர் சேலத்தில் இருக்கிறார். இன்னும் கலந்துக்கொள்வது பற்றி அவர் எதையும் உறுதி செய்யவில்லை. என்எல்சி விரிவாக்கம் தேவை, ஆனால் அதை முறையாக செய்ய வேண்டும்” என்றார்.

MUST READ